வவுனியாவில் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு (Video)
வவுனியா - குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் நால்வர் அடங்கிய குடும்பத்தினர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (07.03.2023) பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் வவுனியா - குட்செட் வீதி , அம்மா பகவான் பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), கௌ.வரதராயினி (வயது 36), இரு பிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது 9), கௌ.கேசரா (வயது 3) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நிலையில் சடலங்கள் மீட்பு
இந்த சம்பவத்தில் கணவன் தூக்கில் தொங்கியவாறும், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam