சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை செயற்படுத்துவதில் தாமதிக்கும் ஆசியா!
வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான பிரகடனத்தை அங்கீகரித்துள்ள 63 நாடுகளில், இலங்கை உள்ளடங்கலாக வெறுமனே 4 நாடுகளே ஆசியப் பிராந்தியத்தைச் சேர்ந்தவையாக உள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டில் இலங்கை இப்பிரகடனத்தை அங்கீகரித்தமையானது வலிந்து காணமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குரிய பதிலை வழங்குவதற்கான முதற்படியாக அமைந்தது என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ஹம்டி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஹனா சிங்கர் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை தாங்கி வருகின்றது இந்த காணொளி,





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
