யாழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம்(Jaffna) - ஆனைக்கோட்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட மூவரையும் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்று(10.06.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாளுடன் கைதான பிரதான சந்தேகநபரை மேலும் இரண்டு நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரியுள்ள நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
கைது நடவடிக்கை
யாழ்ப்பாணம்(Jaffna) - ஆனைக்கோட்டையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரைகள் மற்றும் வாளுடன் நேற்று முன்தினம்(09) நால்வர் பொலிஸாரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டபோதே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
