உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கிகளுடன் தெமட்டகொட பகுதியில் பலர் கைது
உள்நாட்டுத் தயாரிப்பான கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான போதைமாத்திரைகளுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெமட்டகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேட நடவடிக்கையின் போது சந்தேக நபர்களும் கைத்துப்பாக்கிகள் மற்றும் போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
தெமட்டகொடையில் உள்ள கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த 19 கைத்துப்பாக்கிகளையும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருட்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணை
குறித்த 19 கைத்துப்பாக்கிகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும், இவ்வளவு பெருந்தொகையான கைத்துப்பாக்கிகள் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

40 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட நபரொருவரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் இந்த இடம் குறித்த தகவல்கள் வெளிப்பட்டதாகக் தெரியவந்துள்ளது.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam