போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் நால்வர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகசின் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் பொரளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, முகத்துவாரம், 75ஆம் மைல்கல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 480 மில்லிகிராம் ஹெரோயினுடன் முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை, தனமல்வில குகுல்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 685 கஞ்சா கன்றுகளுடன் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கண்டி, நாமல்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5
கிராம் 600 மில்லிகிராம் கஞ்சாவுடன் நாமல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபர்
கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
