பெருந்தொகைப் பணத்துடன் கொழும்பில் நால்வர் கைது
கொழும்பில் ஒரு கோடியே 86 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா உள்நாட்டுப் பணத்தையும், 4 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்தையும் வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை

புறக்கோட்டை உள்ளிட்ட 3 இடங்களில் வைத்து பொலிஸ் விசேட அதிரப் படையினரால் நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
புறக்கோட்டை - டெனெட் சந்தைக் கட்டடத் தொகுதி, மாளிகாவத்தை - நூரானியா சந்தி, கொழும்பு - 10 முதலான இடங்களிலுள்ள 3 தங்க ஆபரண விற்பனை நிலையங்களைச் சோதனைக்கு உட்படுத்தியபோது, குறித்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், வெள்ளவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை முதலான பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| பொலிஸ் சார்ஜன்ட், ஒருவர் தமது துப்பாக்கியை பயன்படுத்தி எடுத்த தவறான முடிவு! |
சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்... 21 நிமிடங்கள் முன்
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri