பளம்பாசியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பளம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பளம்பாசி பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்ட நால்வரை ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளார்கள்.
மாத்தறை மாவட்டத்தினை சேர்ந்த இருவர், புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர், நெடுங்கேணி சேனைப்பிலவினை சேர்ந்த ஒருவர் என நால்வரைக் கைதுசெய்துள்ள ஒட்டுசுட்டான் பொலிஸார், அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இவர்கள் புதையல் தோண்டுவதற்காக வந்துள்ளதுடன் இவர்களிடம் மாத்திரம் வெற்றிலை பாக்கு, பழம், சாம்பிராணி போன்ற பொருட்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான ஒதியமலை, தண்ணிமுறிப்பு பகுதிகளில்
புதையல் தோண்டும் நடவடிக்கைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
