முல்லைத்தீவில் சூட்சுமமான முறையில் கடத்தலில் ஈடுப்பட்ட நால்வர் கைது
முல்லைத்தீவு அனுமதி பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று இரவு (27.02.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதி பத்திரங்கள் ஏதுமின்றி 33 மாடுகளை வீதியூடாக நடாத்தி கொண்டு சென்ற போது புதுக்குடியிருப்பு பொலிஸார் கைவேலி பகுதியில் இடை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த நபர்களை கைது செய்துள்ளதுடன் மாடுகளையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri