சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டு இருந்த வேளையிலும் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
அதற்கமைய அதனை தடுக்கும் நோக்கில் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவளுக்கமைய இன்றைய தினம் இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிப்பர்களும், கல்மடு நகர் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பரொன்றும், புளியம்பொக்கனை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பரொன்றும் தருமபுர பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.