நாவலப்பிட்டியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது
நாவலப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வடிக்கும் தொழிற்சாலையொன்றை நடத்திய 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(29.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
இதன்போது, 47 வயதான பிரதான சந்தேக நபர் உட்பட உதவி புரிந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நாவலப்பிட்டி மற்றும் யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட காப்பகம் ஒன்றில், நீண்ட காலமாக ரகசியமாகவும், நுணுக்கமாகவும் இந்த மோசடியை நடத்தி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மேலதிக விசாரணைகளின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரித்துள்ளனர்.


