கிளிநொச்சியில் மின்சார சபையில் பணிபுரியும் 4 ஊழியர்கள் கைது
கிளிநொச்சியில் மின்சார சபையில் பணிபுரியும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையின் இன்றையதினம்(11.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுமதியின்றி அரசாங்க நிலத்தை சுரண்டுதல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் குற்றத்திற்காக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வர் கைது
கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார சபைக்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபர்கள் மற்றும் தடையப் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சந்தேக நபர்களை நாளை(12) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.