வவுனியாவில் நான்கு பேர் பொலிஸாரால் கைது
வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லபட்ட 20 மாடுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற வாகனம் ஒன்றை கனகராயன்குளம் பகுதியில் வழிமறித்த பொலிஸார் இன்று சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் போலியான அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி மாடுகள் கடத்திச்செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வாகனத்தில் இருந்தவர்களை கைது செய்த பொலிஸார் 16 மாடுகளையும், அவற்றை கடத்திச்செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் உரிய நடைமுறைகளை பேணி கொண்டு செல்லப்படாத நான்கு மாடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இருவரை கைது செய்திருந்தனர். கைது செய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை நடுவர் செய்த கைசைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri