சுகாதார அமைச்சரால் வவுனியாவில் தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் இன்று (17.09) இடம்பெற்றது.
வவுனியா வைத்தியசாலையின் நான்கு மாடிகளை கொண்ட குறித்த விடுதிக்காக மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியாக 114.9 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சிறுவர் மருத்துவ விடுதிக்கான பூங்கா ஒன்றையும் அவர் திறந்து வைத்திருந்தார்.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பல்கலைக் கழக துணைவேந்தர் அற்புதராஜா, வைத்தியசாலை பணிப்பாளர் நிலக்சன், வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை சமூகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.