திருகோணமலையில் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கான புதிய வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று(06) இடம்பெற்றுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் நவேஸ்வரன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் நிமல் ராஜசிங்க, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் குறித்த கிராம சேவகர் பிரிவின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த பயனாளியின் கணவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

10 இலட்சம் ரூபா
குறித்த வீடமைப்பானது 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam