காலக்கெடு விதிப்பது தீர்வாகாது..! ஐ.நா முன்னாள் அதிகாரி கண்டனம்
அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தீர்வை எட்டுவதற்கு விதிக்கப்படும் காலக்கெடு உதவாது என ஐ.நா சபையின் முன்னாள் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கால அவகாசம் வழங்க வேண்டும்..
தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் "உச்சகட்ட மோதல் போக்கு" எந்தவித நன்மையும் பயக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
இரு நாட்டு அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவது நிலைமையை மேலும் மோசமாக்குவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தும்போது, இரு தரப்பும் சில விட்டுக்கொடுப்புகளை செய்வது மிக அவசியம் என்று கிரிஃபித்ஸ் சுட்டிக்காட்டினார்.
"எதிரிகள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்குத் தேவையான போதிய cத்தையும் சூழலையும் வழங்க வேண்டும். அதுவே உலகளாவிய நன்மையைச் செய்யும்," என்று அவர் கூறினார். குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் இத்தகைய அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும், ஆனால் தற்போது இரு தரப்பினரும் அத்தகைய முதிர்ச்சியான போக்கை வெளிப்படுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய வங்கியில் பாரிய உள்மோசடி! சிக்கிய பலர் - வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam