இலங்கையிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் எப்.பி.ஐ அதிகாரி கைது
அமெரிக்க உள்ளக உளவுப்பிரிவான எஃப்.பி.ஐயின் முன்னாள் உயர் அதிகாரி ஒருவர்
இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது அமெரிக்காவில் வைத்து
கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ இன் முன்னாள் உயர் அதிகாரியான சார்ள்ஸ் மெக்கோனியல் என்பவரே இவ்வாறு அமெரிக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்கோனியல் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ரஸ்ய கோடீஸ்வர வர்த்தகர் ஒல்க் டெரிபாஸ்கா என்பவருடன் தொடர்பு பேணியதாக மெக்கோனியல் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மெக்கோனியல் ரஸ்ய தொழிலபதிருடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மெக்கோனியல் 500,000 டொலர் தனிப்பட்ட பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
