சுகாதார அமைச்சின் முன்னாள் பேச்சாளர் பொய்யுரைக்கின்றார் – சன்ன ஜயசுமன
சுகாதார அமைச்சின் முன்னாள் பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார பொய்யுரைப்பதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தைரோக்சின் என்னும் மருந்து வகையின் தரம் குறித்து அண்மையில் யூடிப் வலையமைப்பின் ஊடாக டொக்டர் ஜயருவான் பண்டார கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த மருந்துப் பொருளை உட்கொண்டவர்கள் அதன் மூலம் தமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுவதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும், இந்த கருத்து முற்றிலும் பிழையானது என அமைச்சர் கூறியுள்ளார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்பய்படும் இந்த மருந்துப் பொருள் இன்னமும் சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்மலானையில் உள்ள உற்பத்திசாலையொன்றில் உற்பத்தி செய்யப்படும் இந்த மருந்து வகையை செப்டம்பர் மாதத்தில் சந்தையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகள் கூறுவதாக குறித்த மருத்துவர் வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குறித்த மருத்துவருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
