திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படை முன்னாள் அதிகாரி கைது
விசேட அதிரடிப்படையில் முன்னர் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் திருட்டுச் சம்பவம் ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டில் அஹுங்கல்லை நகரில் அப்போதைய மதிப்பில் சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று காணாமல் போயிருந்தது.
அத்துடன் மோட்டார் சைக்கிளின் பைக்குள் இருந்த பத்தாயிரம் ரூபாவும் சேர்த்து களவாடப்பட்டிருந்து.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நீண்ட விசாரணையின் பின் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படையில் முன்னர் கடமையாற்றிய ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜுலை தொடக்கம் விசேட அதிரடிப்படையில் இருந்து தப்பியோடிய ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
