நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட எரிபொருள் செலவின பட்டியல்
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கடந்த 2023ம் வருடத்தில் மாத்திரம் 26 மில்லியன் ரூபாவை எரிபொருள் பாவனைக்காக செலவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) , நாடாளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பித்த விபரங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோரின் கடந்த கால வாகன பயன்பாடுகள், அதற்கான எரிபொருள் செலவுகள் குறித்த பட்டியலை இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்துள்ளார்.
வாகனங்களுக்கான எரிபொருள
அதன் பிரகாரம் கடந்த 2023ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் டிசம்பர் 31 வரை , முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,தான் பயன்படுத்திய 08 வாகனங்களுக்கான எரிபொருளுக்காக 26 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அந்தக் காலப்பகுதியில் பயன்படுத்திய ஆறு வாகனங்களுக்கான எரிபொருளுக்காக 14 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
முன்னாள் குழுக்களின் பிரதித் தலைவர் நான்கு வாகனங்களுக்கான எரிபொருளுக்காக 78 லட்சம் செலவிட்டுள்ளார்.
எரிபொருள் செலவு
கடந்த 2024ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 09ஆம் மாதம் வரையான காலப்பகுதியில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பயன்படுத்திய வாகனங்களுக்கான எரிபொருள் செலவு 36 மில்லியன் ரூபாவாகும்.
அதே காலப்பகுதியில் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ 13 மில்லியன் ரூபாவையும், முன்னாள் குழுக்களின் பிரதித் தலைவர் 7.2 மில்லியன் ரூபாவையும் எரிபொருளுக்காக செலவிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |