டிரான் - அநுர டீல்! தேசபந்து தொடர்பில் முரணாகும் அரசாங்கத்தின் நகர்வுகள்
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதான தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பு உள்ளிட்ட அரசியல் பரப்புக்களில் தேசபந்து தென்னகோன் பற்றிய தகவல்களே அதிகம் காணப்பட்டன.
எனினும் நீதிமன்றம் பகிறங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளபோதும் அரசாங்க பரப்புக்களில் உள்ள கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தேரர் போல வேடமிட்டு நடமாடுவதாகவும், டிரான் அலஸின் வீட்டில் இருப்பதாகவும், கட்டாய விடுப்பில் அனுப்பவோ அல்லது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யவோ அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதாாகவும், கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கடந்த வாரம், பொதுப் பாதுகாப்புத் துணை அமைச்சர் சுனில் வட்டகலவினால், தென்னகோன் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து தவிர்த்து வந்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூட எச்சரிக்கப்படுகிறது.
இந்நிலையிலும் தென்னகோன் வெளிவரவில்லை, இதற்கு அரசாங்கத்திடம் இருந்து வரும் கருத்துக்கள் நிலையானதாக இல்லை.
அப்படியென்றால் டிலான் - அநுர டீல் என எழுந்துள்ள கருத்துக்கு அரசாங்கம் கூறபோகும் பதில் என்ன...
இவ்வாறான விடயங்களை விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...