முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய யாழ்.விஜயம்(Photos)
இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய யாழ்ப்பாண மாவட்டத்திற்கான
உத்தியபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மானிப்பாய் சுதுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டார்.
தேரருடன் சந்திப்பு
நிகழ்வின் பின்னர் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகைதந்ததுடன் அங்கு இடம்பெற்ற விஷேட பூஜைகளில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை மத்தியஸ்தானத்தின் விகாரைக்கு சென்றதுடன் ஸ்ரீ நாகவிகாராதிபதி ஸ்ரீ விமலரத்தன தேரோவினை சந்தித்து கலந்துறையாடியுள்ளார்.
இந்த விஜயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர்
வ.ஜெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.














தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
