முன்னைய கோஷங்களை கைவிடும் நேரம் வந்துள்ளது! அசோக ரன்வல தெரிவிப்பு
தமது கட்சியின் முன்னைய கோஷங்களைத் தாண்டி, எதிர்காலத்திற்காக இந்த நாட்டைக் கட்டமைப்பதில் ஒரு கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் முன்னைய கோஷங்களை மறந்து முற்றிலும் மாற்றமான வழிமுறைகளைக் கையாளுவது தொடர்பில் அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அவெர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மேலும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் அன்றைய நன்னெறிகள், நடத்தையை விட உயர்ந்த நன்னெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முன்னைய கோஷங்கள்
அத்துடன் அன்றைய கோஷங்களால் முன்வைக்கப்பட்ட விஷயங்களை அதே அடிப்படையில் இன்று அடைந்து கொள்வது முடியாத காரியமாகும்.

சமூக மாற்றம் ஏற்பட்டு நாடு கட்டமைக்கப்படும்போது, அதிலிருந்து ஒரு சில விஷயங்களை அடைந்து கொள்ள முடியும்.
ஆனால் அதற்குப் பதில் அவற்றை வெறும் வெற்று கோஷங்களின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முயன்றால், நாடு புறக்கணிக்கப்பட்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப்பதில் நம்மைக் கட்டியெழுப்புவது மட்டுமே சாத்தியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam