அனுராதபுர சந்தியில் விபத்து: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மரணம்
திருகோணமலை அனுராதபுர சந்தி, விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (14) இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கே.நாகேஸ்வரன் (71வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பேருந்தில் வருகை தந்து மஞ்சக் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண், கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவரும் காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam