முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பில் இன்று முதல் மாற்றம்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முப்படைகளின் பாதுகாப்பு இன்றுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு முப்படைகளின் உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் பாதுகாப்பு
இதன்படி, இன்றைய தினம் முதல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொலிஸாரின் பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட உள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறெனினும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவையும் மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டாலும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டுள்ளதனால் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.