முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல அனுமதிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானியாவுக்கான தனிப்பட்ட விஜயத்திற்கான நிதியை அங்கீகரிப்பதன் மூலம் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார சந்தேக நபரை தலா இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.

சமன் ஏகநாயக்கவின் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
விசாரணையை நடத்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அந்தக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்தார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (18) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam