சுட்டுக்கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி: சந்தேகநபர் கைது!
புதிய இணைப்பு
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூடு, இன்று(12) மதியம் 1:10 மணியளவில் மீகொட, அடிகல சாலையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இன்று(12.08.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாந்த முதுன்கொட்டுவ, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, காரில் வந்த கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
மேலும், அவரது சடலம், ஹோமாகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், நிலத் தகராறுகள் தொடர்பாக சாந்த தொம்கொடுவ பலமுறை பொலிஸ் முறைப்பாடு அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




