அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, 62,000 பேரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச சேவை
கொழும்பில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அரச சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவை அரசியல் செல்வாக்கு அற்ற தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார்.
அத்துடன், பொதுச் சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




