மத்திய மாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கைது!
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹரீந்திர சானக ஐலப்பெரும கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை இன்று (26) கண்டியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாகாண சபையில் பதவி வகித்த காலத்தில் அரசாங்க உத்தியோகம் பெற்றுத் தருவதாக வாக்களித்து இரண்டு நபர்களிடம் இரண்டு இலட்சம் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவரை கண்டி, மாஜிஸ்திரேட் நீதவான் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை (31) கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவரை மீண்டும் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
