இழப்பீடு பெற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத இழப்பீடுகளை மீட்டெடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை நவம்பர் 13ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனுவை சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான ரவீந்திரநாத் தாபரே தாக்கல் செய்துள்ளார்.
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அரகலய போராட்டத்தின் பின்னர், நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேருக்கு ரூ.1.22 பில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுதாரர் கோரிக்கை
இந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சேதத்துக்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டிருப்பது அரசியல் முறைகேடாகவும், சட்டவிரோதமாகவும் உள்ளதாக மனுதாரர் கூறுகின்றார்.
அத்துடன், எதிர்காலத்தில் இழப்பீடுகள் உரிய மதிப்பீட்டு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக வழங்கப்பட்ட தொகைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



