ஜனாதிபதியிடம் மீண்டும் பதவி கேட்கும் முன்னாள் அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் பலர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தங்களுக்கு மீண்டும் அமைச்சு பதவிகள் வழங்குமாறு கேட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்து இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
முறைப்பாடுகள்

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்கள் பதவிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு தங்களுக்கு மீண்டும் அமைச்சு பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இன்னும் சிலர் அமைச்சு பதவிகள் இன்றி தங்களால் சொந்த தொகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக ஜனாதிபதியிடம் முறைப்பட்டுள்ளனர்.
எனவே குறைந்தபட்சம் தங்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகளையேனும் வழங்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் பதில்

இராஜாங்க அமைச்சு பதவிகள் தொடர்பாக எந்தவொரு உத்தரவாதமோ, இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படும் தினம் குறித்த உறுதிமொழியோ ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri