முன்னாள் ஜனாதிபதி தலைமையில் புதிய அரசியல் கூட்டணி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிப்பது தொடர்பாக திரைமறைவில் அரசியல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
தலைமை பொறுப்பை வகிக்க மாட்டார்
எனினும் இந்த கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமான தலைமை பொறுப்பை வகிக்க மாட்டார் எனவும் தலைமைத்துவச்சபை கூட்டணியை வழிநடத்தும் எனவும் தெரியவருகிறது.
இந்த கூட்டணியில் இணையுமாறு முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, அனுரபிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி போன்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படடுள்ளதாக கூறப்படுகிறது.
குமார வெல்கமவுக்கு உயர் பதவி
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமவுக்கு கூட்டணியில் உயர் பதவி வழங்கப்படும் என பேசப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ராஜபக்சவினர் நாட்டை கொள்ளையிட்டு நாட்டை அழித்துள்ளனர் எனவும் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழித்து விட்டார் எனவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சுமத்தி வருகிறார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைமையை விரட்ட வேண்டும் எனவும் அவர் கூறி வருகிறார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
