முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பண்டாரவளை நீதிமன்றத்தினால் நேற்று(20.01.2025) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விஜயமுனி சொய்சாவுக்கு சொந்தமான, சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட ட்ரக் வண்டியொன்றை கடந்த மாதம் ஹப்புத்தளையில் வைத்து பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
அது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பாணந்துறை, வலானை மோசடித் தடுப்புப் பிரிவு பொலிஸார், கடந்த 14ஆம் திகதி விஜயமுனி சொய்சாவிடம் விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
வழக்கின் மேலதிக விசாரணை
அதன் பின்னர், நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டு, இன்று காலை பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, விஜயமுனி சொய்சா தரப்பு வழக்கறிஞரின் வாதங்களின் பின்னர் அவரை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதோடு வழக்கின் மேலதிக விசாரணை பெப்ரவரி மாதம் 06ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |