வாகனங்களை மீள கையளிக்காத முன்னாள் இராஜாங்க அமைச்சர்
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயன்படுத்திய ஆறு அரச வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுடன் புதிய அமைச்சுக்கு சென்ற அமைச்சர்
இதன் காரணமாக விவசாய அமைச்சு போக்குவரத்து பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. அமைச்சருக்கு இணைக்கப்பட்ட மூன்று வாகனங்களும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
விவசாய இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது ஜனாதிபதியினால் வேறு அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் மற்றும் அவரது பணியாளர்கள் அதே வாகனங்களுடன் புதிய அமைச்சுக்கு சென்றுள்ளனர்.
இந்த வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ள போதிலும் இதுவரையில் அவை கையளிக்கப்படவில்லை.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
