ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது
ஆசிரியை ஒருவரை ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர், பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய ஆசிரியை ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆசிரியை மொரகஹஹேனவில் உள்ள கடையொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது பாரவூர்தியில் வந்த ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர், ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதி கைது
எனினும் ஆசிரியை, அரசியல்வாதியின் பிடியில் இருந்து தப்பி அருகில்
உள்ள வீட்டில் தஞ்சமடைந்து, 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையிலே ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி விவகாரம் தொடர்பில் பிரச்சினை
குறித்த அரசியல்வாதிக்கும், ஆசிரியையைக்கும் நிதி விவகாரம் தொடர்பில் பிரச்சினை இருந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அரசியல்வாதி எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
