ரணிலை சந்தித்த மாலைத்தீவின் முக்கிய பிரமுகர்
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஆதரவு
ஏற்கனவே இப்ராஹிம் முகமது சோலிஹ் மாலைத்தீவில் ஆட்சி நடத்தியபோது, அந்த நாடு இந்தியாவுக்கு ஆதரவான நாடாக இருந்தது.
எனினும் அவருக்கு பின்னால் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி, ஆரம்பத்தில் இந்திய எதிர்ப்புக் கொள்கையை கடைப்பிடித்த நிலையில், தற்போது அதில் தளர்வுப்போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
