திருகோணமலையில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள முக்கிய அபிவிருத்தி திட்டம்
திருகோணமலையிலுள்ள (Trincomalee) எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த எண்ணெய் தாங்கிகளை அண்மையில் பார்வையிட்டதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்
திருகோணமலையில் 500 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 24 தாங்கிகளின் முழுமையான உரிமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்தானதாகும்.

அவற்றை பயன்படுத்தி எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதன் மூலம் சர்வதேச கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு கூறியுள்ளது.
எனவே, அதற்கமைய திருகோணமலை துறைமுக முனையத்தையும் அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri