விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சென்னையில் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்தி, வருமானத்தை ஈட்டியதாக கூறப்படும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினர், சற்குணம் என்ற சபேசன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட சற்குணம், இந்தியாவில் விடுதலைப்புலிகளது, அனுதாபிகளின் கூட்டங்களை ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
போராளி அமைப்பின் மறுமலர்ச்சிக்காக, போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு திருப்புவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்று தெரியவந்துள்ளது.
இதேவேளை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் முறைப்பாட்டின் கீழ், ஆறு இலங்கை பிரஜைகள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜூலை முதலாம் திகதி இந்திய தேசிய புலனாய்வு பிரிவு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கடந்த மார்ச் 18ஆம் திகதி, மீன்பிடி கப்பலான ரவிஹான்சியில் ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
