இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அ.தி.மு.க குழுவினர் (Photos)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அ.தி.மு.க குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலானது நேற்றையதினம் (08.05.2023) கொழும்பு அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.
மரியாதை நிமித்தம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை - இந்திய சமூதாய பேரவையின் சார்பில் சிவராமன் மற்றும் காந்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கை மக்களுக்கு சேவை
இதேவேளை எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் எடுத்துரைத்த அவர்கள், இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய தயாராக இருப்பதாக தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய இன்றும் (09.05.2023), நாளையும் (10.05.2023) மலையக பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து, மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
மேற்படி இந்த குழுவினரால் மக்களுக்கான உதவி திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் அதற்கான முழு
ஒத்துழைப்பையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழங்கும் என அமைச்சர் ஜீவன்
தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கிய பாகிஸ்தான்! பிரித்தானியாவில் முக்கிய அதிகாரிகளை சந்தித்த குழு News Lankasri
