முழு அரச மரியாதையுடன் விடைபெற்ற முன்னாள் பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன
இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராகச் சேவையாற்றிய சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல், அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில், முழு அரச மற்றும் பொலிஸ் மரியாதைகளுடன் நேற்று(20) பொரளளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த 17 ஆம் திகதி தனது மாலபே இல்லத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்
விசேட குழுக்கள் மூலம் தீவிர விசாரணை
தனது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகித்தனர்.
எனினும், இந்த மரணம் தொடர்பில் உண்மையைக் கண்டறிய மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து இரு விசேட குழுக்கள் மூலம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்க முடியும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ்மா அதிபரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் 3 மணிக்கு பௌத்த மத வழிபாடுகளுடன் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகின. மாலை 4 மணியளவில் அவரது பூதவுடல் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு, மரியாதை அணிவகுப்போடு மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவரது பூதவுடல் அஞ்சலிக்காக மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்நாள் - முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் தவறான அறிக்கை வெளியிட்ட சுரேஷ் சலே: பொன்சேகா வெளியிட்ட முக்கிய தகவல்