முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தபோதிலும், தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட இருவர் மீதான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய விசேட நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
அமர்வின் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே மற்றும் நீதிபதி திலகரத்ன பண்டார ஆகியோர், பூஜித் ஜெயசுந்தர மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று தீர்ப்பளித்தனர்.
அதே நேரத்தில், குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று நீதிபதி விராஜ் வீரசூரிய குறிப்பிட்டார்.
அமர்வின் பெரும்பான்மை முடிவின்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித மீது சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.
பயங்கரவாதத் தாக்குதல் குறித்த போதுமான உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்தபோதிலும், கடமையில் இருந்த பொலிஸ் மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது, இதனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்தமை, மற்றும் அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர் என்ற குற்றச்சாட்டுக்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன.
மேலும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பான விசாரணைகள் தற்போது நடந்து வரும் நிலையில், அவர் தொடர்பான தீர்ப்பு சற்று நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri