கொடுங்கோல் சட்ட வரைவு சட்டமானால் ஆட்சியாளர்களையும் பாதிக்கும்! முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்
மனித உரிமைகளை பாதிக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு சட்டமாக நிறைவேற்றப்பட்டால் குறித்த சட்டம் தற்போதைய ஆட்சியாளர்களையும் பாதிக்கும் என இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் ஆறாம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு (PSTB) தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மௌனம் காப்பது
அவர் மேலும் தெரிவிக்கையில், மிகவும் ஆபத்தான வரைவாக மனித உரிமைகள் ஆர்வலர்களால் சுட்டிக்காட்ட குறித்த வரவை எதிர்ப்புக்களின் மத்தியில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு மனித உரிமைகளுக்காகப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டதற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வழக்கறிஞர்களும் ஆர்வலர்களும் இந்த விடயத்தில் மௌனம் காப்பது கொடுங்கோல் சட்டத்தை ஆதரிக்கின்றனரா என என்னத் தோன்றுகிறது.
தற்போதைய அனுர குமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மனித உரிமைகளை பாதிக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கொழும்பில் இடம் பெற்ற கோட்டா அரசாங்கத்துக்கு எதிரான அரகலை போராட்டத்தில் மேலோங்கியது.
ஆனால் அதன் பின்னர் ஆட்சி பீடம் ஏறிய அனுர குமார தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதை விட மோசமான ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை சிவில் செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் ஆர்வலர்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு தடை விதிக்கும் ஒரு சட்டமாக பார்க்கப்படுகின்ற அதேவேளை ஏற்கனவே இருந்த சட்டத்தை காட்டிலும் பார தூரமான பிரிவுகளை உள்ளடக்கி இருக்கிறது.

கூட்டங்களுக்கு அழைக்காத நிலை
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவு (PSTB )குறித்து பொதுமக்களிடம் கலந்தாலோசித்ததாக அரசு கூறினாலும் ஆனால் கருத்துக்கள் பெறப்பட்டதைக்கூட உறுதிப்படுத்தவில்லை. கலந்தாய்வு என்பது கலந்துரையாடல்தான், ஆனால் கருத்துக்களைச் சமர்ப்பித்தவர்களைக் கூட கூட்டங்களுக்கு அழைக்காத நிலைதான் காணப்படுகிறது. அது வெறும் சம்பிரதாயத்திற்காகச் செய்யப்பட்ட ஒரு நிகழ்வு GSP+ நிபந்தனைகளுக்கு இணங்க PTAஐ சீர்திருத்த வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் GSP+ ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த வாரிச்சலுகையை பெறும் நாடுகள் ஐநா சமவாயங்களை மீறாமல் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன் அடிப்படையிலேயே இலங்கையில் தற்போது காணப்படுகின்ற பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்குவதாக அனுரகுமாரா திசநாயக்கா தலைமையிலான அரசாங்கம் உறுதிமொழி வழங்கியது.
ஆனால் ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு ஆபத்தான தும் ஐநா சமவாயங்களை மீறுவதாகவும் உள்ளது. ஆகவே தற்போதைய அரசாங்கம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் நீங்கள் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை, ஒரு கட்டத்தில் இந்தச் சட்டம் உங்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்படும் போது அதன் தார்பரியத்தை உணர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan