அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக முன்னாள் செய்தி தொகுப்பாளர் நியமனம்
முன்னாள் ஃபாக்ஸ் செய்தி (Fox News) தொகுப்பாளரான பீட்டர் ஹெக்சேத் (Pete Hegseth) அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், அவரது நியமனத்திற்காக நடைபெற்ற செனட் வாக்கெடுப்பில், ஹெக்சேக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல சர்ச்சையான சூழல்
அந்த நேரத்தில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஹெக்சேத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவே அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pete Hegseth will be our next secretary of defense. This is a great day for America and our military. Congrats @PeteHegseth
— Donald Trump Jr. (@DonaldJTrumpJr) January 25, 2025
🇺🇸🇺🇸🇺🇸
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பால் குறித்த பதவிக்கு பீட்டர் ஹெக்சேத்தை முன்னிறுத்துவது குறித்து ஆரம்பம் முதலே பல சர்ச்சையான சூழல் நிலவி வந்தது.
இந்நிழலயில், பீட்டர் ஹெக்சேத் அமெரிக்க பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினராக இருந்ததோடு, பென்டகன் போன்ற ஒரு பெரிய அமைப்பை வழிநடத்த தகுதியற்றவர் என்று பல இராணுவ நிபுணர்களால் விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 12 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்: விபரீதமாக முடிந்த பனிப்பந்து விளையாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |