இலங்கையின் பொருளாதாரம் உயிர்வாழ வேண்டுமானால் சோசலிசம் அதிகம் தேவை! - ரொனி டி மெல்
இலங்கையின் பொருளாதாரம் உயிர்வாழ வேண்டுமானால் சோசலிசம் அதிகம் தேவை என்று முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் திறந்த சந்தைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்த ரொனி டி மெல் சமீபத்தில் தனது 96ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
இதன்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ரொனி டி மெல் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என தெரியவருகிறது.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் இனியும் முதலாளித்துவத்தை பின்பற்றிக் கொண்டிருக்க முடியாது. இலங்கை அரசாங்கம் வறுமையான மக்களுடன் இணைந்திருக்க வேண்டும்.
இதன்போது இலங்கைக்கு தேவையானது சமமான பொருளாதார வளர்ச்சியாகும் என்றும் ரொனி டி மெல் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்திக்கு பொருளாதாரம் குறித்து ஆலோசனை வழங்க ரொனி டி மெல் இணக்கம் வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதை அரசியல் முறையில் செய்ய முடியாது என்றும், தமது கொள்கை நாட்டை மேம்படுத்துவதாகும் எனவும் ரொனி டி மெல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் பணியாற்றி, அடுத்தடுத்து 11 வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்தவர் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam