வவுனியாவில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கைது
மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்குவது தொடர்பில் பணம் பெற்றுக் கொண்டு காசோலை கொடுத்தமை தொடர்பில் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா நிதி மோசடி குற்றப் பிரிவுப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (07.06.2025) இடம்பெற்றுள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி ஈபிடிபியின்முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனுடன் இணைந்து செயற்பட்ட ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் பணத்தினைப் பெற்றுள்ளார்.
அனுமதிப் பத்திரம்
அதற்கு பொறுப்பாக தனது காசோலையை அவர் வழங்கியுள்ளார். மதுபானசாலை அனுமதிப்பத்திரம் கிடைக்காத நிலையில், குறித்த காசோலையை வங்கியில் வைப்பிட்ட போது அதில் பணம் இல்லை எனத் தெரிவித்து வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா பொலிசாரின் நிதி மோசடி குற்றப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த முன்னாள் ஈபிடிபி உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்டவர் வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி மோசடி குற்றப் பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 49 நிமிடங்கள் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
