மாடுகள், பன்றிகள் கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினருக்கும் உள்ளடக்கப்படுவர்
மாடுகள் மற்றும் பன்றிகள் தொடர்பான கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினரும் உள்ளடக்கப்பட்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் விலங்ககள் குறித்த கணக்கெடுப்பினை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றிகள் மற்றும் மாடுகள் வகையீட்டுக்குள் உள்ளடக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தை விமர்சனம் செய்ய ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார் பின்னர் அதனை பொய் என்று குறிப்பிட மற்றுமொரு ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் குரங்குகள், மர அணில்கள் போன்றன தொடர்பில் கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பன்றிகள் மற்றும் மாடுகள் குறித்த கணக்கெடுப்பின் போது விலங்குகள் கணக்கெடுப்பு குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ருவான் மாபலகம தெரிவித்துள்ளார்.
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam