சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எம்.ஆர்.பி அத்தநாயக்க காலமானார்
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சரும், சிரேஷ்ட அரசியல்வாதியுமான ஏ. எம். ஆர். பி. அத்தநாயக்க காலமானார்.
ஜெ. ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தின் போது உடடும்பர தொகுதியின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், உயர் கல்வி பிரதி அமைச்சராக நாட்டின் உயர் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவையை ஆற்றிய ஒரு மக்கள் பிரதிநிதியாவார்.
இறுதிச்சடங்குகள்
இவரது உடல் இன்று (17) பிற்பகல் 2.00 மணி முதல் செப்டம்பர் 19, சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை பேராதனை, எரியகம, கொழும்பு வீதியில் உள்ள தனியார் மயானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

மேலும், இறுதிச்சடங்குகள் செப்டம்பர் 19, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு மஹையாவ பொது மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வெளியான தகவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு