உக்ரைனுக்காக போரிட்ட பிரித்தானிய வீரருக்கு ரஷ்யாவில் சிறைத்தண்டனை
உக்ரைன் போரில் அந்நாட்டின் வெளிநாட்டுப்படையணியில் (Foreign Legion) இணைந்து போரிட்ட ஹேடன் டேவிஸ் என்ற பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ வீரருக்கு, ரஷ்யா 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் உள்ள நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்ட டேவிஸ்
2024-ஆம் ஆண்டு இறுதியில் ரஷ்ய படைகளால் கைது செய்யப்பட்ட டேவிஸ், உக்ரைன் இராணுவத்திற்காக கூலிப்படையாக (Mercenary) செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, தற்போது அதி உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் கூண்டிற்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போரிட்டதாகவும், அதற்கு மாதம் 500 டொலர் வரை சம்பளம் பெற்றதாகவும் அவர் ஒப்புக்கொண்ட காணொளியை ரஷ்யத்தரப்பு வெளியிட்டுள்ளது.
இந்த தண்டனையை பிரித்தானிய அரசு கடுமையாக கண்டித்துள்ளது.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு (FCDO), ஹேடன் டேவிஸ் ஒரு போர்க்கைதி (Prisoner of War) என்றும், சர்வதேச சட்டங்களின்படி போர்க்கைதிகளைப் போரில் பங்கேற்றதற்காகத் தண்டிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யா தனது அரசியல் மற்றும் பரப்புரை நோக்கங்களுக்காகப் போர்க்கைதிகளைப் பயன்படுத்துவதாகவும், இது ஜெனிவா ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் பிரித்தானியா சாடியுள்ளது.
அரசியல் ரீதியான அழுத்தம்
மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று கூறியுள்ள பிரித்தானிய அரசு, ஹேடன் டேவிஸின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இதேபோன்ற சூழலில் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்ற மற்றொரு பிரித்தானிய வீரருக்கு ரஷ்யா 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போரில் பங்கேற்கும் வெளிநாட்டினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், அரசியல் ரீதியாக அழுத்தத்தை உருவாக்கவும் ரஷ்யா இத்தகைய கடுமையான தண்டனைகளை வழங்கி வருவதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த விவகாரம் பிரித்தானியா மற்றும் ரஷ்யா இடையிலான இராஜதந்திர உறவில் மேலும் கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam