பூவரசன்தீவில் கைக்குண்டுடன் முன்னாள் இராணுவ வீரரொருவர் கைது
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ராசிக் பரீட் பர்ஹான் (29 வயது) எனவும் தெரியவருகின்றது.
கணவனுக்கும் மனைவிக்குமிடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் கணவரான முன்னாள் இராணுவ வீரர் தனது மனைவியை கைக்குண்டை காட்டி பயமுறுத்தியதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் கைக்குண்டை தமது கண்காணிப்பின் கீழ் எடுத்துள்ளதாகவும், கைக்குண்டு இருக்கும் இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அனுமதியைப் பெற உள்ளதாகவும், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கிண்ணியா பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan