பெண்ணொருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவச்சிப்பாய் கைது
அங்கொடை சந்திக்கு அருகில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரை முல்லேரியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த 32 வயது பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கொடை சந்திக்கு அருகில், பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சந்தேகநபர் குறித்த பெண்ணைக் கூரிய கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து குறித்த நபர் தப்பிச்செல்ல முயன்ற நிலையில், பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan