கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்: முன்னாள் இராணுவ சிப்பாய் கைது
கொழும்பு ராகம பகுதியில் உள்ள வீடொன்றில் 76 வயதுடைய பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றையதினம்(08.02.2025) கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், ராகம தலகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் இராணுவச் சிப்பாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
சந்தேகநபர், கடந்த 05 ஆம் திகதி ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மூதாட்டியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரின் உடலையும் எரித்துள்ளார்.
குறித்த நபர் நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றுக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைத் திருட முயன்றுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக தகவல் - ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |